;
Athirady Tamil News

யாழில். அன்னதானத்திற்கு மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

0
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. 
வடமராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் , குறித்த ஆலய அன்னதான மடத்தினருக்கு விற்பனை செய்யவென ஒரு வருட காலத்துக்கு முன்னர் காலாவதியான மருந்து விசிறியை 424 கிலோ  வாழைக்குலைகளை கோப்பாய் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைப்பற்றி இருந்தனர்
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நிலையில் வாழைக்குலைகள் காணப்பட்டமையால் , நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை முற்றாக அழிக்கப்பட்டன
அந்நிலையில் குறித்த வாழைகுழைகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, தன் மீதான குற்றச்சாட்டை வாழைக்குலை விற்பனையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , 05 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.