;
Athirady Tamil News

அமெரிக்காவிடம் இருந்து அதி நவீன போர் விமானங்களை வாங்கிய தைவான்

0

தைபே,

தங்களைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டுள்ள தைவான் தீவை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றுவோம் எனச் சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது. தினந்தோறும் சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் ஊடுருவி வருவதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவு கிறது.

இந்த நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளித்து தற்காப்பை பலப்படுத்திக் கொள்ள, அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன எப்-16வி ரகப் போர் விமானங்களின் முதல் தொகுதி தைவானுக்கு வந்தடைந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவுடன் போடப்பட்ட 8 பில்லியன் டாலர் மதிப்பிலான 66 புதிய போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில், பல்வேறு தாமதங்களுக் குப் பிறகு தற்போது முதற்கட்டமாக 2 விமானங்கள் தைவானின் தைதுங் விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளன. இது தைவானின் வான் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத் துறை மந்திரி வெலிங்டன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.