;
Athirady Tamil News

தட்டம்மைப் பரவலால் திணறும் வங்கதேசம்! 1,100-க்கும் அதிகமானோர் பலி!

0

வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் 1,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் நேற்று (அக்.2) மட்டும் தட்டம்மையால் 4 குழந்தைகள் பலியானதாகவும்; இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 1,114 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,221 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம், சந்தேகிக்கப்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,94,084 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், இதேவேளையில் 21 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், உறுதியான தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 21,623 ஆக அதிகரித்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸின் ஆட்சியில் ஏற்பட்ட தடுப்பூசி செலுத்துவதில் இடைவெளி ஏற்பட்டு இந்தத் தொற்று பரவி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.