;
Athirady Tamil News

கொல்லீன் ஸ்லெம்மர் யார்? விஷ ஊசி செலுத்தியும் மரணிக்காத கொலையாளி! மீண்டும் கவனம் பெறும் வழக்கு!

0

கடந்த 1995ஆம் ஆண்டு 19 வயது கொல்லீன் ஸ்லெம்மர், கொலை செய்யப்பட்ட வழக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கவனம்பெறுவதற்குக் காரணம், மரண தண்டனை நிறைவேற்ற கொலைக் குற்றவாளிக்கு விஷ ஊசி செலுத்தியும் அவர் மரணிக்காததே ஆகும்.

1996ஆம் ஆண்டு கொலைக் குற்றவாளி கிறிஸ்டா பைகேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறை டென்னிஸி நகரில் தொடங்கியது.

ஆனால், அவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தப்பட்டும் அவர் மரணிக்கவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இத்தனை காலம் காத்திருந்த ஸ்லெம்மரின் தாய், நியாயத்துக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டுமோ என்று கலங்கி நிற்கிறார்.

1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்லெம்மர் கொலை செய்யப்பட்டபோது அவருக்கு 19 வயதுதான். மாணவியான அவருக்கு கிறிஸ்டா, டாடரில் ஷிப், ஷடோல்லா பீட்டர்சன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பைகே மற்றும் ஷிப் இடையேயான உறவு குறித்த சண்டையில், ஸ்லெம்மர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததாவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட பைகேவுக்கு மரண தண்டனையும் ஷிப்புக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பீட்டர்சன், வழக்கு விசாரணையில் உதவியதைத் தொடர்ந்து சாட்சியமாக மாறி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கிறிஸ்டா பைகேவுக்கு தற்போது 50 வயது. செப். 30ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. பென்டோபார்பிடல் என்ற விஷ ஊசி அவருக்கு இரண்டு முறை செலுத்தப்பட்டது. ஆனாலும் அவர் மரணிக்கவில்லை. அவர் மூச்சு விடும் சப்தம் கேட்டது என்று மரண தண்டனையை நிறைவேற்றும் சாட்சியம் கூறியிருக்கிறது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். சட்டப்படி மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறிவிட்டார்கள் என்று பைகேவின் வழக்குரைஞர் கூறியிருக்கிறார்கள்.

நரம்புகளில் ஊசிபோடுவதில் சிரமம் இருந்தன, நாளங்கள் சிதைந்து போனது, பென்டோபார்பிட்டல் மருந்தின் வீரியம் குறைவாக இருந்தது மற்றும் தவிர்க்க முடியாமல் சிக்கல்கள் ஏற்படும்போது அவசர மருத்துவச் சிகிச்சைக்கான வசதி இல்லாமை போன்றவற்றை பைகே சார்பில் குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டுள்ளது.

விஷ ஊசி செலுத்தப்படுவதற்கு முன்பு, இறுதி வார்த்தைகள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு என் வாழ்நாளின் பெரும்பகுதியை எப்படிக் கழித்தேனோ, அதுபோலவே, அன்பில் திளைத்தபடியே நான் இந்த உலகை விட்டுச் செல்லப்போகிறேன் என்று பைகே கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இதெல்லாம் சாதாரணமப்பா…

கடந்த 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் இதுபோன்ற மரண தண்டனை நிறைவேற்றம் தோல்வியடைந்திருப்பது முதல்முறையல்லவாம். இதுவரை 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் தோல்வியடைந்திருக்கிறதாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.