;
Athirady Tamil News

ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் அதிரடி கைது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.

நிதி முறைகேடுகள்
இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.