;
Athirady Tamil News

மின் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைப்பு

0

மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்புச் செயற்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மின்சார விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்
மின் விநியோகம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இடைநிறுத்தப்பட்டிருந்த நீர் விநியோக நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இன்று (17) காலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாரிய தடங்கல் ஏற்பட்டது.

இதனையடுத்தே சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நீர்வழங்கல் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.