;
Athirady Tamil News

யாழில். பிரமாண்டமாக நடைபெற்ற குவியம் விருது வழங்கல்

0
இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் ஐந்தாவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட ‘குவியம் விருதுகள்’ நிகழ்வு அண்மையில் யாழில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இம்முறை காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத்திரைப்படங்கள் (Pilot films), திரைப்படங்கள் என 04 பிரிவுகளின் கீழ் மொத்தமாக 48 விருதுகளும் சிறப்பு விருதுகள் சிலவும் வழங்கப்பட்டன.குவியம் விருதுகளில் ஆண்டு தோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரை பாராட்டி கௌரவித்து ‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘தீ‘ (1979) திரைப்படம் முதல் கடந்த வருடம் வெளியான ‘தீப்பந்தம்‘ திரைப்படம் வரை நடித்துக்கொண்டிருக்கும் மூத்த நடிகர் ஏழுமலைப்பிள்ளை அந்த கௌரவத்தைப் பெற்றார்.

அது மட்டுமல்லாது எமது சினிமா துறையில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சிரேஸ்ட கலைஞர்களான நடிகை சாந்தனா, இசையமைப்பாளர் பூவன் மதீசன், நடிகர் ஆதி திரு, இயக்குனர் காரை சிவநேசன் மற்றும் நடிகர் வசந்தசீலன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

‘மகா நடிகை‘ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாமிடம் பெற்றுக்கொண்ட நடிகை நிவேதிகா ராசையா மற்றும் அண்மையில் நாடளாவிய ரீதியில் வெளியாகிய ‘கூத்தாடி‘ திரைப்படத்தில் 12 வேடங்களில் நடித்து அசத்திய செல்வின் தாஸ் (அவுஸ்ரேலியா) ஆகியோரும் சிறப்பு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.