;
Athirady Tamil News

செம்மணி உட்பட அனைத்து விசாரணைகளும் நேர்மையாக நடைபெறுகின்றன: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
செம்மணி விசாரணையில் எந்தவித தலையீடோ அல்லது எந்த விதமான செல்வாக்கையுமோ நாங்கள் செலுத்தாமல் அது நேர்மையான முறையில் நடைபெறுகிறது என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், செம்மணி விவகாரத்தை பொறுத்தவரையிலே கடந்த எந்த அரசும் செய்யாத வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே, பலர் பல கருத்துக்களை சொன்னாலும், நாங்கள் எந்த விசாரணையில் எந்தவித தலையீடும் அல்லது எந்த விதமான செல்வாக்கும் நாங்கள் செலுத்தாமல் நேர்மையான முறையில் அது நடைபெறுகிறது.
செம்மணி மாத்திரமல்ல, எல்லா விசாரணைகளையும் நேர்மையான முறையிலே செயற்படுத்துவதற்கு நாங்கள் பூரண சுதந்திரத்தை வழங்கி இருக்கிறோம்.
நான் நினைக்கிறேன். செம்மணி விவகாரத்தில் சிலவற்றுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் போதுமானதாக இருக்கிறது. நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் தற்பொழுது இந்த அரசாங்கத்தின் மீது, நீதிமன்றத்தின் மீது முதல்முறையாக இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நாளுக்கு நாள் நாளுக்கு நாள் சில நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொடுத்திருக்கிறோம் – என்றார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.