;
Athirady Tamil News

யாழ். குடாக்கடலில் வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்ற விசேட படகு சுற்றுலா

0
யாழ்ப்பாணத்தில் ‘எல்லாளன் டூரிஸம்’ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை நடைமுறையில் வெளிப்படுத்தி வரும் எல்லாளன் டூரிஸம் நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

இம்முயற்சிகளை நேரடியாக அனுபவித்து ஆராயும் நோக்கில், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பணியகப் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்கும் வகையில் இம்முன்னோடிப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.