வடக்கின் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நிச்சயமாக நீதி வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளிப்பு!
;
இதன் போது வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என யாழ் ஊடக அமையத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், எங்கள் அரசாங்கம் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற பிரிவினையோடு நோக்குவதில்லை. கடந்தகால ஆட்சியாளர்கள் போல் நாங்கள் செயற்படப்போவதில்லை. எவரும் நினைத்துகூட பார்க்க முடியாத தீர்ப்புக்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் வந்துகொண்டிருக்கின்றன. படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எங்களுடைய காலத்தில் நீதியை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கான கால அவகாசத்தை தாருங்கள்.
மேலும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை என்னிடம் தாருங்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உரிய தரப்புகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்படுகளை நான் செய்துதருகின்றேன், என உறுதியளித்தார்.
இச் சந்திப்பின் போது யாழ் மாவட்ட ஒருங்பிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்