;
Athirady Tamil News

வெள்ள அபாய எச்சரிக்கை – 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

0

கிங் கங்கை ஆற்றுப் படுகைக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையானது மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், குறித்த பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாகக் குறுக்குவீதிகளைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையான மின்னல்
இதேவேளை மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (28) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இந்த மூன்று மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது, ​​குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.