கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார்.
அதற்கமைய, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுப்பதற்காக செயற்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியு்ளளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய விமான நிலையங்களின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்காக செயற்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் இதனை போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான திட்டங்களுக்கு இணையான வகையில் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.