தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தல் செயற்பாடுகள் இம்முறை மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமாகி கச்சேரி நல்லூர் வீதியின் முத்திரைச்சந்தி வரையான முன்னெடுக்கப்படவுள்ளது
தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செயற்பாடு மாவட்ட செயலகம் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது
மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமாகி கச்சேரி நல்லூர் வீதியின் முத்திரைச்சந்தி வரையான வீதியில் சுத்தமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது
குறிப்பாக கச்சேரி – நல்லூர் வீதியின் புகையிரத கடவை வரையான பகுதியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது
அதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் புதன்கிழமை குறித்த பகுதிகளை மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன், உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்
அதேவேளை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகள் ரீதியாகவும் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.