;
Athirady Tamil News

வடக்கின் முதலீட்டு வலயங்கள் அடுத்த வருடம் முதல் செயற்பட தொடங்கும் ?

0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதனால், வடக்கில் திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்கள் அடுத்த ஆண்டில் செயற்படத் தொடங்கும் என தான் நம்புவதாக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார் 
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம்  வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணம் இயற்கை வளங்களிலும் மனித வளங்களிலும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது
 விவசாயம், கடற்றொழில், பனைசார் உற்பத்திகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்

இவ்வாண்டு வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய இலங்கை முகாமைத்துவக் கழகம், அடுத்த கட்டமாக ஏற்றுமதியாளர் மாநாட்டை முன்னெடுப்பது மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும்

முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமன்றி, உள்ளூர் உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்
 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதனால் , பல அமைச்சர்கள் மாகாணத்தின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்
ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்கள் அடுத்த ஆண்டில் செயற்படத் தொடங்கும் என நம்புகிறேன், முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முயற்சிகள் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகிறது.
வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு, உற்பத்தியை அதிகரித்தல், பெறுமதி சேர்த்தல், புதிய சந்தைகளை அடைதல், முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை முக்கியமானவை என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.