;
Athirady Tamil News

கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்…கண்ணீரை உணவாக்கிய செடி

0

ரஷ்யாவை சேர்ந்த ஒரு மனிதரின் கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விசித்திர சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் யகுடியா மாகாணத்தை சேர்ந்த 42 வயதான மக்ஸிம் ஸ்லெப்சோவ் என்பவர், காட்டில் சுற்றுலா சென்றபோது செடியின் கிளை கண்ணில் குத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை
அதன்பிறகு தொடர்ந்து கண் எரிச்சல், வலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். அவரைச் சோதித்த மருத்துவர் கண்ட காட்சி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு கண்ணுக்குள் நுழைந்த ஒரு சிறிய விதை, அவரது கண்ணின் வெள்ளை திசுக்களில் 3 மி.மீ ஆழத்திற்கு வேரூன்றி, இரண்டு இலைகளுடன் செடியாக வளர தொடங்கியிருந்தது. கண்ணீரை நீராக கொண்டு அந்த விதை முளைத்துள்ளது.

உடனடியாக செயல்பட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அந்த செடியை வேரோடு பிடுங்கி அகற்றினர்.

தற்போது மக்ஸிம் குணமடைந்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.