;
Athirady Tamil News

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பலி

0

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆம்புலன்ஸுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், ஒரு பெண் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டானோ தண்டாலில் உள்ள ஒரு அடிப்படை சுகாதார மையத்திலிருந்து மித்தி நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, ​​தார்பார்க்கர் மாவட்டத்தின் நாகர்பார்க்கர் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.

உடல்நலக் கோளாறுகள்

இதுதொடர்பாக தார்பார்க்கர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஜாப்ரி கூறுகையில், “அந்தப் பெண் உட்பட இதுவரை பத்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார். மேலும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், நோயாளி மற்றும் பிறரை வசதியாக உணர வைப்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிலிண்டரை வாகனத்திற்குள் நகர்த்தியபோது அது வெடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.