;
Athirady Tamil News

அமெரிக்கா: தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக ரூ. 4,246 கோடி செலவு செய்த எலான் மஸ்க்

0

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

அமெரிக்காவில் நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி மீதான அதிருப்தியின் எதிரொலியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

பிரதிநிதிகள் அவையில் (மொத்தம் 435) பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி 242 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசு கட்சி 151 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் பிரதிநிதிகள் அவையானது ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

இதனிடையே, டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. இந்த இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பில் மட்டும் புதன்கிழமையில் (நவ. 4) சுமார் 130 பில்லியன் டாலர் இறங்கியது. அதுமட்டுமின்றி, குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள் என தேர்தலுக்கு முன்னர் பதிவிட்டிருந்த பதிவையும் எலான் மஸ்க் தற்போது நீக்கியுள்ளார்.

மேலும், இந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவதற்காக எலான் மஸ்க் 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,246 கோடி) செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், குடியரசுக் கட்சி பெரும் தோல்வியையே அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.