;
Athirady Tamil News

செம்மணி மனித புதைகுழி நீதிப் போராட்டம்: சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

0
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில்,  நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் , அதில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 
யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தலைவராக சிவபாதம் இளங்கோதையும் ,  செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும், உப தலைவராக விக்னேஸ்வரியும் உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் ,
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதோடு, சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்
குறித்த இப்பேராட்ட முன்னெடுப்பு தொடர்பிலும் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ப்பிலும் கலந்துரையாடல் ஒன்றினை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நடாத்த தீர்மானித்துள்ளோம்.
அதன் பிரகாரம் நாளைய தினம் சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் குறித்த கலந்துரையிடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில்  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.