;
Athirady Tamil News

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

0

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் உணவின் தரம் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்காக புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து உணவகங்களிலும் இந்த QR குறியீடு காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், பொதுமக்கள் அதனை ‘ஸ்கேன்’ செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் நேரடியாக சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரின் அடையாளம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தப்படாது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், முறைப்பாடு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை உணவகத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டாம் எனவும், கொள்வனவு செய்த பற்றுச்சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநகர சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.