;
Athirady Tamil News

டிரம்ப் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி:ஈரானில் மக்கள்கொண்டாட்டம்

0

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் தொடுத்தார். இப்போருக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு எழுந்தது. இது அமெரிக்க இடைக்கால தேர்தலில் இது எதிரொலித்தது. தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் டிரம்புக்கு தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தொடர்ந்து ஈரானில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பேரணிகள் நடந்தது.ஈரான் தலைநகர் தெக்ரானில் செயல்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாக சென்றனர். இதேபோல் பல இடங்களில் பேரணிகள்,இஸ்ரேலியக் கொடிகளை இஸ்ரேலுக்கு மரணம் முழக்கமிட்டனர்.

இதற்கிடையே ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எக்ஸ் வலைதள பக்கத்தில்

கூறும்போது, அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை. நாங்கள் இந்த செய்தியை ஆதரிக்கிறோம். இந்த மாற்றத்திற்கான வாக்கெடுப்பை அமெரிக்க அரசாங்கம் புறக்கணித்தால் அது அவர்களுக்கு ஒரு கெட்ட கனவாக மாறிவிடும் என்றார்.

இந்த நிலையில் ஈரான உச்ச தலைவர் மொஜ்தபா மெனி கூறும்போது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகளால் எந்த மாற்றமும் ஏற்படப்போ வதில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் விரோதப் போக்கு தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

அமெரிக்கா தனது ராணுவத் திறன்கள் மற்றும் சர்வதேச ஆற்றல் ஆகிய இரண்டிலும் மீளமுடியாத சரிவைச் சந்தித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் அண்மையில் நிகழ்ந்த மாற்றங்கள் அமெரிக்க அதிகாரத்தின் எல்லைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதோடு அதன் உலகளாவிய மேலாதிக்கம் சிதைவடைவதை வேகப்படுத்தி உள்ளன என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.