;
Athirady Tamil News

இஸ்ரேலில் புதிய பிரதமர் யார்? 8-ம் தேதி அறிவிப்பு

0

ஜெருசலேம்,

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

அரபு கட்சிகளின் கூட்ட ணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களிலும், ரா-அம் 8 இடங்களிலும் வென்றன. இதனால் புதிய அரசை அமைப்பதில் அரபு கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகியுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நெதன்யாகு வும், காடி ஐசன்கோட்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் காடி ஐசன்கோட்டுக்கு அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

ஏற்கனவே, நெதன்யாகு விற்கு ஆதரவு அளித்து வந்த யுனைடெட் தோரா ஜூடாயிசம் என்ற கூட்டணி கட்சி தனது ஆதரவை வாபஸ் கொண்டது. அக்கட்சி 7 இடங்களில் பெற்றுக் வென்றுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கட்சிகளுடன் அதிபர் ஐசக் ஹெர்சாக் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். 67 உறுப்பினர்கள் ஐசென் கோட்டிற்கு ஆதரவளித்தனர். 46 பேர் நெதன்யாகு வைப் பரிந்துரைத்தனர்.

இருவரையும் 7 உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை. இந்த ஆலோசனைக்கு பிறகு அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறும்போது, ஆலோசனைகளின் முடிவுகள் தெளிவாகத் தோன்றலாம். ஆனால் அரசாங்கத்தை அமைக்கும் திறன் யாருக்கு உள்ளது என்பதைத் தீர்மா னிக்கும் அதிகாரம் சட்டப்படி எனக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் பல்வேறு அரசியல் குழுக்களுக்கு இடையி லும், குழுக்களுக்கு உள்ளேயும் நிலவும் பரஸ்பர வீட்டோ (எதிர்ப்பு-தடுப்பு) அதிகாரங்களால், யார் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை.

சில கட்சித் தலைவர்களுடன் நேரடியாகவும் விரைவாகவும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர முயற்சிப்பேன். இஸ்ரேல் மக்களுக்காக ஒரு நிலையான, நல்ல அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் தொடர்பாக 8-ந்தேதி அதிபர் ஐசக் ஹெர்சாக் உள்ளார். அறிவிக்க நெதன்யாகு அல்லது காடி ஐசென்கோட் ஆகிய இருவரில் யாருக்கு அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்பதை அவர் அறிவிக்க உள்ளார். இதில் காடி ஐசென்கோட் டுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.