;
Athirady Tamil News

சாய்ந்தமருதில் LEADER ASHRAF TROPHY 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: தலைவரின் வழிகாட்டலில் இளைஞர்கள் நேர்வழிப்படுத்தப்படுவர்!

0
video link-
 
https://fromsmash.com/kZDdqpsZqa-dt

சாய்ந்தமருது இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களை விளையாட்டின் ஊடாக ஒன்றிணைத்து ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘LEADER ASHRAF TROPHY 2026’ மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடர் இன்று சனிக்கிழமை (07.11.2026) கோலாகலமாக ஆரம்பமானது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஆரம்பமான இச் சுற்றுத்தொடரின் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய சாய்ந்தமருதுக்கான இளைஞர் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் இச் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளும், விட்டுச் சென்ற தியாகங்களும் ஈடு இணையற்றவை. சமூக மாற்றம், சிறுபான்மையினருக்கான உரிமைப் போராட்டம், பிராந்திய அபிவிருத்தி என்பவற்றுக்கு அப்பால், குறுகிய காலத்தில் அவர் விட்டுச் சென்ற பெருமைமிக்க நாமம் தான் ‘அஷ்ரஃப்’. இன்று தமிழ் சமூகமும் போற்றும் வகையில் அமைந்த அத்தகைய மாமனிதரின் ஞாபகார்த்தமாகவே ‘LEADER ASHRAF TROPHY’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக் கிண்ணத்தின் மூலம் மர்ஹூம் அஷ்ரஃபின் தலைமைத்துவப் பண்புகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் தற்கால இளைஞர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே எமது முதன்மை நோக்கமாகும்.”

“கிரிக்கெட் என்பது வெறுமனே ஒரு உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டோ மட்டுமல்ல; அதற்குள் தலைமைத்துவம், பொறுமை, வெற்றியில் பணிவு மற்றும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஆகிய உயரிய குணங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய நற்பண்புகளை எமது இளைஞர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதே இப் போட்டித் தொடரின் இலக்காகும்.””இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்து வரும் அபாயகரமான சூழல் காணப்படுகின்றது. இளைஞர்களைப் போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தும் மாற்று நடவடிக்கையாக, சாய்ந்தமருது யூத் காங்கிரஸ் (Youth Congress) ஊடாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சாய்ந்தமருது பிரதேசம் முழுவதையும் உள்ளடக்கிய மாபெரும் விழிப்புணர்வு நடைபவணி ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.”

மழை குறுக்கிட்ட போதிலும் சிரமங்களுக்கு மத்தியில் இப் போட்டித் தொடரை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய உழைத்த பயாஸ், பாஸ்கோ உள்ளிட்ட இளைஞர் அணியினருக்கும், அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர் சமாதி மற்றும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உறுப்பினர்களுக்கும் அவர் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.அத்துடன், இன்னும் நான்கு மாதங்களுக்குள் சாய்ந்தமருதில் பலமிக்க இளைஞர் காங்கிரஸ் படையணியை உருவாக்கி, கட்சியின் தலைவரை அழைத்து மாபெரும் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர்.ஏ.காதர்,கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷர்ரப் முதுநபின், முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான பிர்தௌஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் குறித்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.