;
Athirady Tamil News

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சபாநாயகர் தேர்வு

0

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் தேர்தல்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு 120 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றிபெற வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 48 இடங்களிலும், முன்னாள் ராணுவ தளபதியும், யாஷா கட்சி தலைவருமான காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காடி ஐசன்கோட் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறார். காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க கூடுதலாக 5 வாரங்கள் கால அவகாசம் வழங்கி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உத்தரவிட்டுள்ளார்.

சபாநாயகர்

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதன் கஹானா இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மற்றும் அரபு கட்சிகள் மதன் கஹானாவுக்கு ஆதரவாக 66 வாக்குகளை செலுத்தியுள்ளன. அதேவேளை, நெதன்யாகு ஆதரவு பெற்ற ஆபிர் கட்ச் 52 வாக்குகளை மட்டும் பெற்றார். இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகராக மதன் கஹானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் விரைவில் இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.