வவுனியாவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு: ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் சம்பவம்
வவுனியாவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு: ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் சம்பவம்
ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஒமந்தை, கொந்தக்காரன்குளத்தைச் சேர்ந்த து.நாகராசா (வயத 60) என்பவர் கடந்த புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் ஒமந்தை பொலிசில் முறைப்பாடு செய்ததுடன், அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் காணாமல் போன குறித்த நபர் அப் பகுதியில் இருந்து இன்று (21.11) சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
