;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவு நனவானது

0
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சொந்தமாக ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் 2,000 வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவின் இயற்றாலை வரணி கிராமத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட செயலர்  மருதலிங்கம் பிரதீபன், பயனாளி ஒருவருக்கான வீட்டினை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 75 வீடுகள் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டவுள்ளது.
இதற்கமைய, வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளும், ஊர்காவற்றுறையில் 2 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடும், நல்லூரில் 6 வீடுகளும், சண்டிலிப்பாயில் 6 வீடுகளும், சங்கானையில் 4 வீடுகளும், உடுவிலில் 5 வீடுகளும், தெல்லிப்பழையில் 13 வீடுகளும், கோப்பாயில் 3 வீடுகளும், சாவகச்சேரியில் 12 வீடுகளும், கரவெட்டியில் 8 வீடுகளும், பருத்தித்துறையில் 6 வீடுகளும், மருதங்கேணியில் ஒரு வீடும், கரைநகரில் 2 வீடுகளும் என மொத்தம் 75 குடும்பங்கள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,
You might also like

Leave A Reply

Your email address will not be published.