;
Athirady Tamil News

அலிபாபாவும் 40 திருடர்களும் பங்குபற்றிய நுகேகொடை பேரணி

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய கூட்டணி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பு "அலிபாபாவும் 40 திருடர்களும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; குடும்ப பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம்

பொத்துவில் பொலிஸ் பிரிவின் ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை நேற்று (22) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹுலன்னுகே பொத்துவில் பகுதியில்…

யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள்…

24 மணிநேரத்திற்குள்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

வங்கதேச நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று (நவ. 22) காலை 10.36 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான…

பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது – ரூ. 5.76 கோடி பறிமுதல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில்…

நீங்கள் ‘ஆம்’ என்று மட்டும் சொன்னால் போதும்; இந்திய வம்சாவளி மேயரிடம்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ 'பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என ட்ரம்ப்பும்…

போதை பொருள் கடத்தல் விவகாரம் ; மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உறுதி செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ‘புத்திம’ எனும் மீன்பிடிப் படகில்…

வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வொண்டிப் பகுதியில், வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் மற்றும் 36 வயதான பெண் ஒருவர் நள்ளிரவு வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை குறித்த இருவரும் சட்டரீதியாக விவாகரத்து…

கடுகண்ணாவ அனர்த்தத்தில் பலியான பேராதனை பல்கலை விரிவுரையாளர்

நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர்…

கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கியிருந்த மேலும் இருவர், சற்றுமுன்னர் உடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்…

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பயணிகள் பலர் படுகாயம்

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (České Budějovice) நோக்கிப் பயணித்தது. பயணிகள் பலர் படுகாயம்…

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியோனிடாஸ்…

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது…

ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் ; இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு

இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து…

எல்லை மீள் நிர்ணயமும் முஸ்லிம் பிரதேசங்களும்

மொஹமட் பாதுஷா மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பரவலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசாங்கம் இன்னும் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. அடுத்த வருடம் தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் அரசாங்கம்…

நீதிமன்றில் வசமாக சிக்கிய பசில் ராஜபக்ச ; காட்டிக் கொடுத்த விமான டிக்கட்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு…

கரூர் துயரத்திற்கு பின்னர் நாளை மக்களை சந்திக்கும் விஜய் – எங்கே தெரியுமா?

தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக நாளை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி…

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவா்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா். அந்த நாட்டின் நைஜா் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியான செயின்ட் மேரீஸ் பள்ளியை வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதக்…

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் ; பலர் காயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அறிவுறுத்தல்…

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசன் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவ.10 முதல் 21 வரை நடக்கிறது.…

கடுகண்ணாவ மண்சரிவு ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரே இவ்வாறு சடலமாக…

தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ; ஈரான் சவுதி அரேபியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு ஈரான் சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது…

இளைஞனுக்கு எமனாக மாறிய வேன் சாரதி ; தீவிரமாகும் விசாரணை

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் உள்ள கொடகம போக்குவரத்து கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற வேனின் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த…

முட்டை களவாடியவர் போதைப்பொருளுடன் கைது ; மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான முட்டைகள்

சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மோசமாக நடத்தப்படுவதால் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாக பிரித்தானிய அரசு மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த…

மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்

நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில்…

வேலைவாய்ப்பு தரும் கல்வியையே 87 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள்; ஆய்வில் தகவல்

புதுடெல்லி, இங்கிலாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மையம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:- சர்வதேச உயர்கல்வியில் இந்திய மாணவர்களின்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்

இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், தொடர்ந்து…

19 வயது இளைஞனின் உயிரை பறித்த கார்

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், இந்த…

வீட்டின் மேல் சரிந்து விழுந்த மண்மேடு ; உடமைகள் சேதம்

திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த மண்மேடு சரிந்து…

கடுகண்ணாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன் மீட்பு

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்

ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும். இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும்…

மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான் – இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!

12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொலை ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில், அப்போது மாணவி விலகி செல்ல…