இளைஞனுக்கு எமனாக மாறிய வேன் சாரதி ; தீவிரமாகும் விசாரணை
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள கொடகம போக்குவரத்து கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற வேனின் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கம்புருப்பிட்டிய பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியயசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.