;
Athirady Tamil News

தாவடியில் வீடு புகுந்து வன்முறை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். மின்வெட்டு வேளையில் நேற்று வியாழக்கிழமை…

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்!!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு…

இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!

நுகேகொடை - மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளது. மேலும், குறித்த பகுதியின் தற்போதைய நிலை தொடர்பிலும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதேவேளை, நேற்றிரவு நடந்த மோதல்கள் தீவிரவாதக் குழுவின்…

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு!!

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் - சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து எரிபொருள் கோரி கும்பல் ஒன்று இவ்வாறு எதிர்ப்பில்…

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை…

தீவிரவாத குழுவே தாக்குதல் !!

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை விடுத்துள்ளது. நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரதீவிரவாத குழுக்களே இருந்தன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ !!

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று (31)…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, வவுனியா கிராமத்தில் விசேட உணவு வழங்கல்..…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, வவுனியா கிராமத்தில் விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு,…

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்தாரா? சந்தேகிக்கும் சிங்கள மக்கள்!!

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்திருக்கலாம்...யாழ் வான் பரப்பில் உலங்கு வானூர்திகள் பறப்பது தெரிந்ததா? என பல சிங்கள ஊடகவியலாளர்களும் சிங்கள முற்போக்காளர்களும் எம்மிடம் வினவுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட…

நாட்டின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு உத்தரவு அமுல்…!!

நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை பொலிஸ்…

போராட்டக்காரர்கள் மீது மின்சாரத்தை நிறுத்திவிட்டு தாக்குதல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும்…

போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)

ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களால் பேருந்து ஒன்று தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று (31) இரவு 7.30 மணியளவில் இந்த…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய…

வடக்கின் பெரும்போர்!! (படங்கள்)

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 115வது கிரிக்கட் போட்டி 7ம்,8ம்,9ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. எஸ்எல்ரி மொபிரெலின்…

யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த விசாரணைக்கு பணிப்பு!!

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம்…

பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது தென்னை கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி…

டீசல் தேடுபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!!

அண்மையில் இலங்கை வந்த டீசல் கப்பலுக்கு செலுத்த தேவையான 52 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இதுவரை எவ்வித கொடுப்பனவும் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 37,500 மெற்றிக் தொன் டீசல்…

வவுனியாவில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: ஒரே நாளில் இரு ஆண்களின்…

வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிசாரால் இன்று (31.03) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா தவசிகுளம் பகுதியில்…

துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞன்!!

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மருதமுனை காரைதீவு சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டிகள் களவாடப்பட்டு வருவதாக…

சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு சென்ற போது நேர்ந்த சோகம்!

செட்டிகுளம் - வீரபுரத்தில் சுடுகாட்டுக்கு சென்ற போது குளவிக்கு கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்பு செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்படைந்துள்ளனர். இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம்…

6 கோடி கஞ்சா அதிரடியாக மீட்பு !!

மன்னாரிலிருந்து நீர்கொழும்புக்கு 6 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவை கடத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 110 பொதிகளில் 300 கிலோ கஞ்சா இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் என்கிற பெயரில் இப்போதைப்பொருளை…

’எங்களை சபிக்கிறார்கள் என்பது தெரியும்’ !!

எமக்கு காதுகள் நன்றாக கேட்கிறது. கண்களும் நன்றாக தெரிகிறது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷ . அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசைகளில் நிற்பவர்கள் ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும் என்றார். “நாட்டின்…

வீட்டிலிருந்தே தமது கடமைகளை செய்யுமாறு பிரதமர் பணிப்பு!!

பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் ஏனைய அமைச்சுக்களில் உள்ள ஏனைய அதிகாரிகளை வீட்டிலிருந்தே தமது கடமைகளை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை சேமிப்பதற்காக இந்த…

கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்ட பல்கலை மாணவன்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவர் என…

தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு…

வௌ்ளவத்தை பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் இடைநிறுத்தம் !!

வெள்ளவத்தையின் புகழ்பெற்ற பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து…

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை – துணைவேந்தர்…

தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை…

பட்டினி சாவில் மக்களை தள்ளாதே வவுனியா நகர மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கோத்தா - மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக என தெரிவித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (31.03.2022) காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.…

தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!!

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிளா ராஜபக்ஷ நீக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, திலக் பிரேமகாந்தவை…

மின்வெட்டு காரணமாக பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு !!

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது. அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக…

மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் பலி!!

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் ஒரு 5 வயது சிறுவன்…

எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் !! (படங்கள், வீடியோ)

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின்…

வவுனியா சிவபுரம் பகுதியில் ஆலயத்தினுள் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!! (படங்கள்)

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31.03.2022) அதிகாலை 35வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக…