;
Athirady Tamil News
Daily Archives

18 December 2021

நெடுங்கேணியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப்பற்றியது!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப் பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (18.12) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு கிராம…

தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிப்பு : மக்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா, பறநாட்டாங்கல் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏ9 வீதி பறநாட்டாங்கல்…

த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோ !!

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.…

பயிற்சி பட்டதாரிகள் 51,000 பேருக்கு நியமனம் !!

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன…

வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்…

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!!

புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த…

மனோ கணேசனின் பிறந்த நாள் விருப்பம்!!

இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள…

டாக்காவில் புனரமைக்கப்பட்ட காளி கோவிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்…

மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தந்தையாகக் கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரகுமான் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ராம்நாத்…

பழிக்குப்பழியாக பெயிண்டர் குத்திக்கொலை – 11 பேர் கும்பல் ஆத்திரம்…!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (19), இவர்கள் 2 பேரும் நேற்றிரவு உறவினர் ஒருவரை சபரிமலைக்கு அனுப்பி வைக்க கெஜ்ஜல்…

இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 93,045 பேருக்கு பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

கள்ள காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் கடந்த 09 ஆம் திகதி…

13 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி கடந்த 15 ஆம் முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,145 பேருக்கு தொற்று…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில்…

உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா…!

2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று…

கேரளாவில் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தைக்கு 35 ஆண்டு சிறை…!

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மே 24-ந்தேதி அவரின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் சிறுமியும் அவரின் தந்தையும்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான 10 வாகனங்கள்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள்…

நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்!!

இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு…

மேலும் 343 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 343 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 547,182 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

3 நாடுகளிடம் கடன் வாங்க தீர்மானம் !!

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கடன் வாங்குதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்…

குடைபிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடியவர் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்!!

மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடி சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

பெண் சமூகத்துக்கு அவமானம் இழைத்துவிட்டார்: ரமேஷ்குமாருக்கு எடியூரப்பா கண்டனம்..!!

கற்பழிப்பு குறித்து காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் எம்.எல்.ஏ., கூறிய கருத்துகள் குறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ரமேஷ்குமார் பெரிய பெரிய விஷயங்கள் உபதேசங்களை…

ஒமைக்ரான் பரவல்: ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரசால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இங்கிலாந்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 70 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி முழுமையாக செலுத்தி விட்டாலும், பூஸ்டர்…

தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்…!!

நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை…

சவுதி அரேபியாவில் ஒட்டக அழகு போட்டி- ஆபரேஷன் செய்து அழகை மாற்றியது கண்டுபிடிப்பு…!!

உலக அழகி முதல் உள்ளூர் அழகிப்போட்டி வரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒட்டக அழகு போட்டி பற்றி அறிந்து இருக்கிறீர்களா? இந்த போட்டி சவுதி அரேபியா நாட்டில் தான் நடந்து வருகிறது. இந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ரியாத்…

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம் விதிப்பு..!!

அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஃபியூச்சர் குழும நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது தொடர்பான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் இந்த…

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் தடை- வடகொரியா அதிரடி உத்தரவு…!!

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும்…

அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்?

2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பல முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க…

ஃபிட்ச் மதிப்பீடுகளில் இலங்கை மேலும் தரமிறக்கம்!!

ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியுள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடைசி மதிப்பாய்வில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக…

வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று- கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான்…

தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பரவிய ஒமைக்ரான் தொற்று கடந்த 12-ந்தேதி கேரளா மாநிலத்திலும் கண்டறியப்பட்டது.…

கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்…!!

இந்தியா முழுவதும் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில்…

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: ஆய்வில் தகவல்…!!

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் இதனால்…

லிட்ரோ எரிவாயுவை தரையிறக்க அனுமதி!!

லிட்ரோ நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் உள்ள எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக வந்த கப்பல் ஒன்றில் இருந்தே எரிவாயுவை இறக்குவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

பெண்ணை ஈவு இரக்கமின்றி 200 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்ற செல்போன்…

டெல்லி சாலிமார் பாக் பகுதியில் ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கெட்டியாக…