பெண் சமூகத்துக்கு அவமானம் இழைத்துவிட்டார்: ரமேஷ்குமாருக்கு எடியூரப்பா கண்டனம்..!!
கற்பழிப்பு குறித்து காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் எம்.எல்.ஏ., கூறிய கருத்துகள் குறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரமேஷ்குமார் பெரிய பெரிய விஷயங்கள் உபதேசங்களை போல் பேசுகிறார். ஆனால் அவர் பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். இதை கண்டிக்கிறேன். இதன் மூலம் அவர் பெண் சமூகத்திற்கு அவமானம் இழைத்துவிட்டார். தனது பொறுப்பற்ற பேச்சால் தவறு செய்துள்ளார். இதற்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா, “அடுத்த ஜென்மத்தில் ரமேஷ்குமார் பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போது அவருக்கு பெண்கள் படும் கஷ்டம் என்ன என்பது தெரியும். சேலை கட்டிக்கொண்டு நடமாடினால் அவருக்கு பெண்களின் கஷ்டம் தெரியும்” என்றார்.