;
Athirady Tamil News
Daily Archives

1 September 2022

சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு- 74 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

சிக்கிமில் உள்ள யுமதங் பள்ளத்தாக்கில் இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 74 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு படையினர்…

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்..!!

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றல் பாதிக்கபட்டு மீண்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்கள் கடந்த…

பண மோகத்தால் சுகேசுடன் நெருங்கி பழகிய ஜாக்குலின்- ரூ.7.12 கோடி, நகைகளை பெற்றதாக…

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடை தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசையும் அமலாக்கத்துறை…

தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ. அறிவிப்பு..!!

1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவன் தனது கூட்டாளிகள் மூலம் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளான். தாவூத்…

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- ஆம் ஆத்மி அரசு வெற்றி..!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றிப் பெற்றுள்ளது. ஆம் ஆத்மிக்கு மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு…

செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கும் விழா விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்- வாலிபர் உள்பட…

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் மலர். மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்பு கொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட மலர்,…

இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும்!!

2001ம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு வருடமும் இவர்கள் கூறும் சுந்தர கதைகள்…

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி- இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்..!!

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று…

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன மேல் மாகாண வடக்கு…

பிரகாஷ் இயக்கத்தில் “வனவேட்டை ”!! (வீடியோ)

யுத்தத்திற்குப் பின் வன்னி மண்ணிலிருந்து வரக்கூடிய சினிமா சார்ந்த படைப்புக்கள் விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. மல்லாவி சேர்ந்த இயக்குநர் பிரகாஷ் அவ்வப்போது குறும்படங்களை வெளியிட்டு வருபவர் தற்போது அவரின் இயக்கம் மற்றும்…

ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..!!

நடப்பாண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாகவும். ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடியாகும்…

குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி தாய் பலி !!

மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று (1) மாலை இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,946 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் புதிதாக 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 7,231 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்…

ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை தள்ளுவண்டியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற கணவர்..!!

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக '108' ஆம்புலன்சுக்கு கணவர் போன் செய்தார். ஆனால் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் வேறு…

மாணவர்களே வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறீர்களா..!!

வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டுக்கு…

விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை..!!

விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில்…

இன்று எரிபொருள் விலை குறையுமா?

விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட…

நாடு திரும்புகிறார் கோட்டா!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாளை மறுதினம் (03) சனிக்கிழமை காலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக உதவிகளையும் வழங்க எதிர்பார்க்கிறோம்!!

சர்வதேச நாணய நிதியம் மூலம் இலங்கைக்கு வழங்கவுள்ள 2.9 பில்லியன் டொலருக்கு மேலதிகமாக மேலும் பாரிய தொகையை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் பிரதி தலைவர் மசாஹிரோ நொசாக்கி தெரிவித்தார். நாணய நிதியத்தின் இருதரப்பு மற்றும்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 102 நாட்களாக சென்னையில் ஒரு…

‘வாட்ஸ்அப்’, ‘கூகுள் மீட்’ போன்ற இணையதள அழைப்பு செயலிகளை…

வாட்ஸ்அப், கூகுள் மீட், சிக்னல் போன்ற இணையதள அழைப்பு மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற வசதிகள் கொண்ட செயலிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக டிராயிடம் மத்திய அரசு கருத்து கேட்டு உள்ளது. வாட்ஸ்அப், கூகுள் மீட், சிக்னல் போன்ற செயலிகள் செய்திகளை…

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று (வியாழக்கிழமை) வருகிறார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படு கிறது.…

‘சினூக்’ ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை…

இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து…

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !! (மருத்துவம்)

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக்…

புகைப்பொருட்களின் விலைகள் எகிறின !!

சகல வகையான புகைப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இன்று முதல் ரூ.3, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 என்றடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் புகைப்பொருட்களின் விலைகளும்…

கல்முனை தமிழ்ப் பிரிவின் தரமுயர்வு? (கட்டுரை)

கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கல்முனை (வடக்கு) தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை. உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தியதுடன் பல்வேறு நிர்வாக…

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,380 கோடி மானியம் – மத்திய அரசு வழங்கியது..!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில்…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர்…

டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது – கட்சி மேலிடம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால்…

மூன்று மாதங்களில் 15 கொலைகள்!!

இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் காலி மாவட்டத்தில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றில் 12 கொலைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு…

ஜெயராஜ் படுகொலை: புலி உறுப்பினர் விடுதலை!!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் விடுதலை செய்தது.

சஜித்தின் அலுவலக ஊழியர் சுட்டுக்கொலை!!

கேகாலை - களுகல மாவத்தை பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியரான, கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36…