;
Athirady Tamil News
Daily Archives

6 May 2023

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி – கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்!!

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக்…

அவுஸ்திரேலிய இராணுவ திட்ட இலக்காக இந்து சமுத்திர நாடுகள்..!

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

நீண்ட காலமாக இடம்பெற்ற ஒக்சிஜன் திருட்டு!!

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த…

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு !!

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின்…

குஜராத் காந்தி நகரில் தெருவில் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரஷித் கான்!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய…

3ம் சார்லஸிடம் பாரமபரிய வாள் ஒப்படைப்பு!!!

லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு முடிசூட்டப்பட்டது.முன்னதாக 3ம் சார்லஸிடம் வைரம் உள்ளிட்ட கற்கள் பாதிக்கப்பட்ட வாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து 3ம்…

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு- மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான்…

குதிரை சவாரியின் போது ‘மிஸ் யுனிவர்ஸ்’ பலி: ஆஸ்திரேலியாவில் சோகம்!!

ஆஸ்திரேலியாவில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த மிஸ் யுனிவர்ஸ் சியன்னா வீர், திடீரென விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா நாட்டின் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியாளரான சியன்னா வீர் (23) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்…

மாதவிடாய் சுகாதாரம் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரத்தை பகிர்ந்த ஸ்மிருதி…

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார்.…

ஜப்பானில் பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!!

ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு…

ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல ஆன்லைனில் முன்பதிவு வசதி- ரெயில்வே அமைச்சகம்…

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது- பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோ பேட்டி !!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி…

நீரில் மூழ்கி சிறுமி பலி; சிறுவன் மாயம்!!

பெலிஹுல் ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் 12 வயது சிறுவனை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ஆளும் கட்சிக்குள் வலுக்கும் விரிசல்!!

உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில்…

கந்தரோடையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைய அழைப்பு!!

கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாற்றாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை…

சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணை!!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பல நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்…

குருகிராமில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த இருவர் கைது!!

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர்…

உக்ரைனில் டிரோன் ராணுவம் திட்டத்தின் கீழ் மேலும் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி!!

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. எனவே…

பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார்: தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக…

இந்தியாவுக்கும், பிரான்சுக்குமான இடையேயான ராணுவ கூட்டின் 25-வது ஆண்டு இது ஆகும். இதைக் கவுரவிக்கிற விதத்தில், ஜூலை மாதம் 14-ந் தேதி 'பேஸ்டில் தினம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிற பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை…

புங்குடுதீவுக்குப் பெருமை: ”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா” நடாத்திய,…

”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா, நடாத்திய கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு” (படங்கள் வீடியோ) பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் 30/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா , தமிழ் மொழி மற்றும் இனம்…

உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நீரா தாண்டன் நியமனம்- அமெரிக்க அதிபர்…

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:- பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு,…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள்…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான…

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா: மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!!

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர்…

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் – விழாக்கோலம் பூண்டது லண்டன்!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது…

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திர விழா!! (PHOTOS, வீடியோ)

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள்,…

ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான ஒரு எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும்: மம்தா…

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் மாநில…

கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம் !!

கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.…

பருவகாலத்துக்கு முன்பே 28 சதவீதம் அதிக மழை- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது. நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,870,466 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,870,466 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,656,596 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,091,373 பேர்…

அரியாலையில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்!!

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹயஸ் - மோட்டார் சைக்கிளில் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்…

காங்கிரஸ் கட்சி, இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு!!

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.76 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.76 கோடியாக…

மஹிந்தவின் தன்சலில் வீரவன்சவின் மனைவி!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ விஜேராம இல்லத்திற்கு வெளியில் கடலை தன்சல் ஒன்றை நேற்று (05) நடத்தினார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்டு,…

இலங்கையில் பலர் போதைக்கு அடிமை!!

இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் 1 இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதை பொருளுக்குக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஐஸ் மற்றும் கஞ்சா பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர்…