வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில், வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு பணவனுப்பல்
கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 544.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
அத்துடன் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த பணவனுப்பல் 3,102.2 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது