;
Athirady Tamil News

பாடசாலை மாணவியின் வாயை உடைத்த ஆசிரியர்; தமிழ் பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்

0

நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்

இச்சம்பவமானது கடந்த 5ஆம் திகதி பாடசாலை நேரத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான மாணவி, பாடசாலையின் இரு பெண் ஆசிரியர்கள் மூலமாக அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல்
நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல்
எனினும் ஆசிரியரின் தாக்குதலால் மாணவியின் நிலைமை பாரதூரமாக இருந்துள்ளதால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துள்ளது.

அதன் பின்னர் மாணவி நேரடியாக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாணவியின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தாய் வெளிநாட்டில் பணிப்புரிகின்றார். குறித்த மாணவியும் மற்று அவரது மூன்று சகோதரிகளும் தனது பாட்டியுடனும் தனது தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலைரள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை குறிப்பிட்ட ஆசிரியர் முன்னைய பாடசாலையில் இருந்து தண்டனைக்குரிய குற்றத்திற்காக இடமாற்றம் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.