;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் பவுன்டேஷனின்” அலுவலகத் திறப்புவிழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

0

“மாணிக்கதாசன் பவுன்டேஷனின்” அலுவலகத் திறப்புவிழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தில் அலுவலகத் திறப்பு விழா.
##########################

“மாணிக்கதாசன் நற்பணிமன்றம்” கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு பலவிதமான உதவிகளை இன, மத, மொழி வேறுபாடில்லாமல் இலங்கையின் சகல மாவட்ட மக்களுக்கும் உதவி செய்து வந்துள்ளது.

இதனை மேலும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள், சமுக ஆர்வலர்கள், மற்றும் புளொட் தோழர்களின் பங்களிப்புடன் வலுப்படுத்தி ஒழுங்குபடுத்தலுடன் புதிய கட்டமைப்புடன் எமது சமூகத்தின் தேவையறிந்து அதற்கான உதவி வழங்களுடன் சமுக அபிவிருத்திக்கு தடையாக உள்ளவற்றை நிவர்த்தி செய்து எமது மக்களையும், ஒட்டுமொத்த தமிழினத்தையும் மேம்படுத்தி நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் வழியாக உயர்த்தும் நோக்கத்தை சென்றடைவதற்காக ஒரு மையப்புள்ளியாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் அலுவலகம்” தளபதி அமரர் மாணிக்கதாசன் அவர்கள் பிறந்ததினமான தைப் பொங்கல் தினமான இன்று (14.01.2021) வியாழக்கிழமை வவுனியா புகையிரத விதியில் அமைந்துள்ள தேனீர்ச்சாலையின் மேல்மாடியில் காலச் சூழ்நிலைக்கேற்ப அமைதியாக சுப நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது.

விசேடமாக அழைக்கப்பட்ட விருந்தினர்களான புளொட்டின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களான வவுனியா வெங்களசெட்டிக்குள பிரதேச சபையின் தவிசாளர் தோழர் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தலைமையில் வவுனியா நகரசபை உறுப்பினர் தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் தோழர் எஸ்.யோகராஜா (யோகண்ணன்), ஆகியோருடன் தோழர் பழனிமுத்து சிவராஜா (சிவா), மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.திருக்கேஸ்வரன் சுஜீவன், ஊடகவியலாளர் திரு.காந்தன், மன்றத்தின் பிரதம ஆலோசகர்களில் ஒருவரும் கவிஞருமான திரு.மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுப நேரத்தில் தவிசாளர் தோழர் சிவமண்ணர் சகிதம் பிரதேசசபை உறுப்பினர் தோழர் யோகராசா அவர்களால் நாடா வெட்டி திறந்து வைத்து திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்கும், நினைவு தீபங்களும் ஏற்றப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டது. அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு பால் காச்சப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

விழாவில் அமரர் மாணிக்கதாசன் அவர்களது நினைவுரையை தோழர் யோகன் அவர்கள் உரையாற்ற, மன்றத்தின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி ஆலோசகர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் உரையாற்றினார். நிறைவில் தந்தையை இழந்த பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கற்றல் உபகரணப் பொதியும், கணவரை இழந்த தாயொருவருக்கு உலருணவுப் பொதியும் வழங்கப்பட்டது.

அதேவேளை அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாள் நினைவாக வவுனியா மணிப்புரத்தில் அமைந்துள்ள ஆனந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அன்னையர்களுக்கு விசேட உணவும் கொடுக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது. நிறைவாக மன்றத் தலைவர் திருக்கேஸ்வரன் சுஜீவன் அவர்களின் நன்றியுரையுடன் திறப்பு விழா இனிதாக நிறைவுபெற்றது.

இதேவேளை கடந்த இருதினங்களுக்கு முன்னர், வவுனியா வடக்கு பிரதேச மீள்குடியேற்ற கிராமமான, அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட எல்லைக் கிராமம் காஞ்சுரமோட்டையை தத்தெடுத்து அங்கு வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும், இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை குறித்த கிராமத்தின் கிராமசேவையாளரின் அனுமதியுடன் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§

மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கு, யாழ்.ஏழாலை, யாழ்.உடுவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த புளொட் பிரித்தானியாக் கிளையின் ஆரம்பகால உறுப்பினர்கள் இருவர் உட்பட; தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம் (கனடா); தோழர் முகுந்தன் (பிரித்தானியா); தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா); தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி)

மற்றும் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான.. தோழர்.ரமணன்; தோழர்.சித்தா, தோழர்.தேவண்ணர்; தோழர்.வரதன்; தோழர்.அசோக்; தோழர்.பிரபா; தோழர்.பாபு, தோழர்.குமார் (ஒபேர்புர்க்), தோழர்.சிவா(பேர்ண்), தோழர்.தயா (பேர்ண்), தோழர் தயா (கிர்க்பெர்க்), தோழர்.அன்ரன் (லோகன்), தோழர்.குணா, தோழர்.மோகன் (சர்கென்ஸ்), தோழர் செல்வபாலன், தோழர்.மனோ, தோழர்.ஆனந்தன்; தோழர்.குழந்தை, தோழர்.புவி; தோழர்.குமார்அண்ணர், தோழர்.ஜெகன்அண்ணர், தோழர் சுவிஸ்ரஞ்சன்; மற்றும் இவர்களுடன் தமது பெயர்களை குறிப்பிட விரும்பாத மேலும் இருவரும் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.