;
Athirady Tamil News

“அமரர் இராசாத்தி அம்மா” நினைவாக, விசேட சித்திரா பௌர்ணமி பூசை.. (வீடியோ படங்கள்)

0

“அமரர் இராசாத்தி அம்மா” நினைவாக, வவுனியா ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட சித்திரா பௌர்ணமி பூசை.. (வீடியோ படங்கள்)
======================================

“இராசாத்தி” என அழைக்கப்படும் அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் நினைவாக வவுனியா சிவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சித்திராப் பௌர்ணமி விரத விசேட பூசையும், இராசாத்தி அம்மாவுக்கான ஆத்மசாந்தி பூசையும் அதனைத் தொடர்ந்து மதிய உணவும் வழங்கப்பட்டது.

சுவிசில் வசிக்கும் பேர்ண் முருகன் ஆலய முக்கியஸ்தர்களில் ஒருவரும், சுவிஸ் தூண் “யாழ் ஏசியன் சுப்பர் மார்க்கட்” உரிமையாளருமான ராஜூ என அழைக்கப்படும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் மகளின் நிதிப்பங்களிப்பில், தனது அப்பம்மாவின் நினைவாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா சிவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் பாலஸ்தானம் செய்யப்பட்ட இடத்தில் ஆலயக் குருக்களினால் விசேட பூசை செய்யப்பட்டதுடன் “இராசாத்தி அம்மா” அவர்களின் ஆத்மசாந்தி பூசையும் இடம்பெற்றது.

மிகவும் பின்தங்கிய கிராமம் என்ற வகையிலும், நாளாந்த கூலித் தொழிளாளர்கள் வாழும் கிராமம் என்ற வகையிலும், அமரர் இராசாத்தி அம்மா அவர்களின் நினைவாக சித்திராப் பௌர்ணமி பூசையுடன் விசேட மதிய உணவும் வழங்குவதற்கு மாணிக்கநாசன் நற்பணி மன்றத்தால் இவ்வாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

வெகு விமர்சையாக பூசைகள் இடம்பெற்று சித்திராப் பௌர்ணமி பூசைகள் நிறைவு பெற்றது. ஆலய சூழலில் வசிக்கும் அம்மாள் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு இராசாத்தி அம்மாவின் நினைவாக சித்திராப் பௌர்ணமி பூசை நிகழ்வுகள் இனிதாக நிறைவு பெற்றது.

இதேவேளை இன்றைய சித்திரா பௌர்ணமி தினத்தில், அமரத்துவமாகிய அன்னையர்களை நினைவு கூறி, அவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” பிரார்த்திக்கின்றது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.
26.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.