;
Athirady Tamil News

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய, பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் இராமலிங்கம், திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன, அதன் முதல்நிகழ்வாக இன்றைய தினம் வவுனியா முருகனூரில் நடைபெற்றது.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னாள் அதிபர் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் நிகழ்வினை முன்னிட்டும், அவரது மூத்த மகனான சிவா என அன்புடன் அழைக்கப்படும், திரு.இராமலிங்கம் சிவலிங்கம் அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டும் அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட பெறுமதியான உலருணவுப் பொதிகள் அடங்கிய உதவிகள் இன்றுகாலை முதற்கட்டமாக வவுனியா முருகனூர் பிரதேசத்தில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்ட்து.

அமரத்துவமடைந்த அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்கள், அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய கல்லூரி, குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், யாழ் ஸ்டான்லி காலேஜ் ஆகியவற்றின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றியதுடன் சமய, சமூக தொண்டராகவும் விளங்கியவர். அதேபோல் அவரது சிரேஷ்ட புதல்வனான சிவா எனும் திரு.இராமலிங்கம் சிவலிங்கம் புங்குடுதீவு சுப்பிரமணியர் வித்தியாசாலை, யாழ். இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கல்வி பயின்று பின்னர் டென்மார்க் நாட்டுக்கு புலம்பெயர்ந்து அந்நாட்டில் சமூக, அரசியல் ஈடுபாடுகளில் ஆர்வமாகி செயல்பட்டு வருபவர்.

அமரர்.இராமலிங்கம் மற்றும் அவரது மூத்த மகனான திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு திரு.சிவலிங்கம் அவர்களின் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பில் அக்குடும்பத்தினர் வழங்கிய நிதியில், முதல் நிகழ்வாக வவுனியா முருகனூர் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் முருகேசு இராமலிங்கம், திரு. இராமலிங்கம் சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமரர் இராமலிங்கம் அவர்களின் மனைவியும் திரு.சிவலிங்கம் அவர்களின் தாயாருமான ராசாத்தி என அன்புடன் அழைக்கப்படும், திருமதி. இராமலிங்கம் சொர்ணகுமாரி, மற்றும் திரு.சிவலிங்கம் அவர்களின் மனைவி, பிள்ளைகளான கௌரி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.சிவலிங்கம் பாலகௌரி, பிள்ளைகள் செல்வன்.நிரோஷ், செல்வி.தர்ஷனா, செலவன்.நிதுர்ஷன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

முதல் நிகழ்வானது இன்றையதினம் அமரர் இராமலிங்கம் மற்றும் திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதியும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டு சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முதல் நிகழ்வாக வவுனியா முருகனூர் கிராமத்தை சேர்ந்த பல சிறுவர்,சிறுமியரென அவர்களின் பெற்றோர்கள், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு இவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்றம் சார்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வவுனியா சமலங்குளம் அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி. வசந்தமலர் கலாநீதன் அவர்களின் ஒழங்குபடுத்தலிலும், தலைமையிலும் முருகனூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு க.தேவராசா, கமக்கார அமைப்பு தலைவர் திரு ம.மகாலிங்கம் ஐயா, சமூக செயற்பாட்டாளர் திரு க.இராதாகிருஸ்ணன், சமுர்த்திசங்க தலைவர் திருமதி க.இராஜேஸ்வரி, சமுர்த்திசங்க செயலாளர் திருமதி நிலோஜினிm ஆச்சிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி பி.சுவேந்தினி, பாதுகாப்பான புலம்பெயர்வு செயற்பாடாளர் திருமதி ர.கமலதேவி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ள கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதேவேளை புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் முருகேசு இராமலிங்கம், திரு. இராமலிங்கம் சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் இரண்டாவது நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு பெரியசாளம்பன் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் முருகேசு இராமலிங்கம், திரு. இராமலிங்கம் சிவலிங்கம் ஆகியோரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும், வழங்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் முருகேசு இராமலிங்கம், அவர்களின் ஆத்மா சாந்தியதடைய வேண்டுவதுடன், அவரின் மூத்த மகனான திரு. இராமலிங்கம் சிவலிங்கம் அவர்களை “பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.சிவலிங்கம் அவர்களின் மனைவி கௌரி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.சிவலிங்கம் பாலகௌரி, பிள்ளைகளான செல்வன்.நிரோஷ், செல்வி.தர்ஷனா, செலவன்.நிதுர்ஷன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
29.01.2024

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.