;
Athirady Tamil News

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
#################################

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் கனிஷ்டபுத்திரன் செல்வன்.யாழிசன் அவர்களின் பிறந்தநாள் விழாவினை கடந்த இருபத்தேழாம் திகதி தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகள், தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த சில வருடங்களாக உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வன் செல்வன்.யாழிசனின் தனது பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வன்.யாழிசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தாயக உறவுகளினால் குறிப்பாக பாடசாலை மாணவ மாணவிகளினால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் பரப்புக்கடந்தான் கிராம அலுவலர் பிரிவிற்குட்ப்பட்ட பாடசாலையில் கல்வி கற்றுவரும் சுமார் 62 மாணவ மாணவிகளுக்கு “கல்விக்கு ககரம் கொடுப்போம்” எனும் தொனிப் பொருளில் “மாணிக்கதாசன் நற்பணி” மன்றத்தினால் 2024/03/02ம் திகதி மாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பிறந்தநாள் காணும் திரு.யாழிசனிடம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவித்ததும், எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக அதுக்கு சம்மதம் தெரிவித்தார். இவரது தந்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர்.லெனின் எனும் திரு.செல்வபாலன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தந்தையைப் போன்றே சமூகத் தொண்டில் என்றும் முன்னின்று தனயனும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் பரப்புக்கடந்தான் கிராம அலுவலர் பிரிவிற்குட்ப்பட்ட பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, வழங்கப்பட்டது.

இதேவேளை திரு.யாழிசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வும், “பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்” வழங்கும் நிகழ்வும் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மன்னார் மாவடட செயலாளர் தோழர்.ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ராஜன் அவர்களின் உறவுமான மற்றும் இக்கிராமத்தின் சமூக சேவைகள் செற்பாட்டாளருமான திரு பகிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இச் செயல்ப்பாட்டினை ஒருங்கமைத்த இக்கிராம இளைஞர் கழக ஒருங்கமைப்பாளரும் பயனாளியுமான செல்வி ஆனந்தன் சர்மிதா, சமூக செயற்பாடடாளர் திரு.பெர்னாண்டோ ரெஜிகுமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததோடு
நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்த நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு ஏற்கனவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமது இனிதான பிறந்தநாளினைக் கொண்டாடிய சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் புதல்வன் செல்வன்.யாழிசன் அவரது பெற்றோர், அவரது அண்ணா ஈழதர்ஷன், அண்ணி லெவீனா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “சகல களையும் கற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவதோடு” அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும் பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
27.02 2024.

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.