;
Athirady Tamil News

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)

0

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)
######################

புங்கையூர் செல்வியே,
புன்சிரிப்பு நாயகியே
ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்
ஒளி வீசும் அற்புதமே..

மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,
பேரன்பு கொண்டு வாழும்
சுதாகரன் செலவியரே..

இன்றைய பிறந்தநாளில்
இங்கிதமான நல் வாழ்த்துக்கள்..

இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தார்.

திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கி தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் சுவிஸ் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும், சமயத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் பிறந்தநாள் நிகழ்வானது முதலில் வவுனியா எல்லைக் கிராமத்தில் உள்ள பகுதியில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவர்களினால் அவரது பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இன்றையதினம் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்ததை ஏற்று, இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ்வுதவியை வழங்கி வைத்தார்.

இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் அவர்களின் நிகழ்வை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா ஆச்சிபுரம் கழகத்தின் செயற்பாட்டாளரான திருமதி.பிரியங்கா அவர்கள் ஒழுங்கமைப்பில், சமூக செயற்பாட்டளர்களான திருமதி. சதீஸ் சஜிகலா, திருமதி. சுதாகரன் சுதாகரி, திருமதி.கதிரேசன் கௌரி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியாக இவ்வுதவியை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் பிறந்தநாளைக் காணும் திருமதி.செல்வி சுதாகரன் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், திருமதி.செல்வி சுதாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

திருமதி சுதாகரன் செல்வி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
01.04 2023.

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.