;
Athirady Tamil News

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
############################################

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்..

மண் விட்டு மறைந்து -நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
மனம் விட்டு மறையாமல்
எந்நாளும் வாழ்வீர்கள்..

திருமதி நவமணி நடனசிவராசா

நீர்வேலி வடக்கில் வசித்துவந்த கந்தையா சேதுலட்சுமி தம்பதியரின் புதல்வியாக 04 ஆம் தேதி ஐப்பசி மாதம் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். சின்னத்துரை சின்னப்பிள்ளை தம்பதியரின் மகன் நடனசிவராசா அவர்களை திருமணம் செய்து இல்லறத்தினை சிறப்பாக நடாத்தி வந்தார்.

சின்னத்துரை நடனசிவராசா அவர்களும் அவர்தம் மனைவி நவமணி நடனசிவராசா அவர்களும் சிறந்த சமய சமூக பணிகளை முன்னெடுத்து பெரும் சேவைகள் செய்தவர்கள். நீர்வேலி வாய்க்காற்தரவை பிள்ளையார் கோயில் திருப்பணிகள் ஆலய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியதுடன் , நீர்வேலி சப்தகன்னியர் கோயில் திருப்பணிகள் மற்றும் ஆலய வளர்ச்சிக்கு தம்பணியாற்றியதுடன் ஆலயத்திற்கு தினமும் விளக்கு வைப்பதும் தன் கடமையாக தொடர்ந்து செய்தவர். மேலும் அன்னதான மண்டபம் ஒன்றை தமது சொந்த நிதியில் அமைத்து கொடுத்தவராவார். நீர்வேலி செல்லக்கதிர்காம சுவாமி கோயில் திருப்பணிகளில் பங்கு கொண்டதுடன் திருத்தேர் ஒன்றினை தமது நிதிப்பங்களிப்புடன் அழகிய சித்திரத்தேர் ஒன்றை உருவாக்கி அன்பளிப்பு செய்ய பெரும் திருப்பணிகள் செய்தார்.

மேலும் இவர்களின் புதல்விகளில் சுவிஸில் வதியும் திருமதி தயாளினி குணரத்தினம் மற்றும் அவரது கணவர் திரு.குணரெட்ணம் அவர்களது சமய சமூக சேவைகள் அளப்பெரியவை. அந்தவகையில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழும் தேவைக்குட்பட்ட குடும்பமாக தமது வாழ்வாதாரத்தினை தொடர முடியாதவர்களுக்கு தொடர்ந்து பல உதவித்திட்டங்களை வழங்கி வருகிறார். அந்தவகையில்

வீடு அமைத்து கொள்ள முடியாத குடும்பங்களாக இனம் காணப்பட்டு கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர்களால் உறுதிப்படுத்திய குடும்பங்களுக்கு வீடு அமைத்து கொடுத்தமை. குறிப்பாக மட்டக்களப்பு உன்னிச்சை நெடியமடு கிராமத்தில் மற்றும் யாழ்ப்பாணம் நீர்வேலி கிராமத்தில் என பல வீடுகள் தனது சொந்த நிதியில் அமைத்து கொடுத்தவராவார். அத்துடன் யாழ்/ ஆவரங்கால் கிராமத்தில் வீடு அமைத்து கொடுக்க நிதி பங்களிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு உன்னிச்சை நெடியமடு கிராமத்தில் ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றை அமைத்து கொடுத்தமை. உடையார்கட்டில் வசித்து வரும் தண்ணீர் வசதி இல்லாத குடும்பத்திற்கு பாரிய செலவில் கிணறு அமைத்து கொடுத்தமை

மட்டக்களப்பு உன்னிச்சை நெடியமடு கிராமத்தில் முதன் முறையாக மொறட்டுவை பல்கலைகழகத்தில் பொறியியல் கல்வி கற்க தெரிவான மாணவனுக்கு 4 வருடத்திற்கான செலவினை பொறுப்பேற்று தொடர்ந்து செய்து வருவதுடன் மேலும் நீர்வேலி உட்பட பல இடங்களில் கற்றல் செயற்ப்பாடுகளை முன்னெடுக்க தேவைக்குட்பட்டவர்கள் என இனம் காணப்பட்ட மாணவர்களது கற்றல் செயற்ப்பாட்டிற்கு உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர் இல்லம் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றமை, மேலும் வருடாந்தம் தனது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் வைபவங்களை வருடாவருடம் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக வாழ்வாதாரம் அற்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்வதுடன் உணவு உடை உறைவிடம் என அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் சிறப்பாக ஆற்றி வருவதுடன் “வாழ்நாள் சாதனைப்பெண்மணி” “சமூகசேவகி” “அறக்கொடையரசி” “இறைபணிவள்ளல்” “அறநெறிச்செல்வி” என பல பட்டங்களையும் திருமதி.தயாளினி குணரெட்ணம் பெற்றதுடன் ஒருகை கொடுப்பது மறு கை அறியாது என்பது போல எந்தவொரு தற்பெருமையும் இல்லாமல் செய்யும் எந்த உதவித்திட்டங்களையும் எங்கும் விளம்பரப்படுத்துவதில்லை .அவ்வாறான தன்னிகரில்லா தலைவியாக சாதனப்பெண்மணியாக திகழும் திருமதி தயாளினி குணரத்தினம் அவர்களது பணிகள் மற்றும் அவர் தந்தை தாயாரது சிறந்த பணிகள் சேவைகள் என்றும் ஞாலத்தில் நிலைபெறும்.

யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி நடனசிவராசா நவமணி அவர்களின் 31 ந் நாள் நினைவு நாளை முன்னிட்டு வன்னி எல்லைக் கிராமப் பிரதேசங்களில் பல்வேறுதரப்பட்ட பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டதும்,

சமய, சமூக செயற்பாடடாளர்களான திரு.திருமதி அமரர்கள் நடனசிவராராசா நவமணி ஆகியோரில் திருமதி நவமணி நடனசிவராசா அவர்களின் 31 ந் நாள் நினைவேந்தலில் அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, அவரின் ஞாபகார்த்தமாக சுவிஸில் வசிக்கும் அவரது மக்கள்களில் ஒருவரான மகள் திருமதி. தயாளினி குணரெட்ணம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் விசேட மதிய உணவு வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..

முதலில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி நடனசிவராசா நவமணி அவர்களின் 31 ந் நாள் நினைவு நாளை முன்னிட்டு நெளுக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட மோட்ஷ அர்ச்சனை நடைபெற்று அவரது சாந்தி வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவமாணவிகளுடன் மற்றும் ஆசிரிய சமூகத்துடன் இணைந்து அனைவருக்குமான விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் முதலில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி நடனசிவராசா நவமணி அவர்களின் 31 ந் நாள் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்துக்கு விசேட மலரஞ்சலி செய்யப்பட்டு தீபார ஆராதனையுடன் தேவாரபாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அனைவருக்குமான விசேட மதிய உணவும் வழங்கப்பட்ட்து.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் இரண்டாவது நிகழ்வாக வன்னி எல்லைக் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி.பிரியங்கா அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா ஆனந்தபுரம் கிராம *தலைவர் திரு அ.நமச்சிவாயம், *செயலாளர் திருமதி ந.வனஜா, #ஆட்சிபுரம் கிராம Rds தலைவர் திரு ரா. கண்ணா, *பொருளாளர் திரு பூ. சங்கர், *சமூகசேவையாளர் க. கௌரி ஆகியோருடன் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அமரத்துவமடைந்த அமரத்துவமடைந்த அமரர் திருமதி நடனசிவராசா நவமணி அவர்களின் 31 ந் நாள் நினைவேந்தலில் அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரத்துவமடைந்த அமரர் திருமதி நடனசிவராசா நவமணி அவர்களின் நினைவு நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது மகள் திரு.திருமதி தயாளினி குணரெட்ணம் குடும்பத்துக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
15.04.2024

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.