கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ)
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ)
##########################
கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியான வசந்தா அக்கா எனும் திருமதி. பிரேமகுமாரி ரவி அவர்களின் பிறந்தநாள் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டது..
அதேபோல் லண்டனில் வசிக்கும் திரு.திருமதி கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி மதுரா அவர்களது பிறந்தநாள் அவருடன் இணைத்து வவுனியா எல்லைக் கிராமத்தில் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் பேத்தியும், லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபைத் தலைவரும், சிறந்த சமூக சேவகருமான கண்ணன் அண்ணன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வியான திருமதி.மதுரா திவாகர் அவர்களின் பிறந்ததினம் வவுனியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கோனாடப்பட்ட்து.
லண்டனில் வசிக்கும் மதுரா மற்றும் கனடாவில் வசிக்கும் வசந்தா அவர்களுடைய பிறந்தநாளை வவுனியா கந்தபுரம் கிராம பிரிவில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
முதல் நிகழ்வாக பாலர் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மதுரா மற்றும் வசந்தா அவர்களுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் சுகுமார் ஷர்மிலன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா பாலர் பாடசாலை ஆசிரியர் பத்மநாதன் ஜனனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் சுகுமார் ஷர்மிலன், மகளிர் அமைப்பினர், மாணவர்கள்,பெற்றோர்கள் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றையதினம் பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.வசந்தா அவர்களுக்கு அவரது அன்புக்கணவர் ரவி, மகள் ராகவி, மருமகன் கிரேஸ் ஆகியோருடன் அதேபோல் மதுரா அவர்களின் பெற்றோரான திரு.திருமதி. கண்ணன் ஆனந்தி அவரது அண்ணன் மதுரன், கணவர் திவாகர் மற்றும் உறவுகள் நண்பர்களுடன் இணைந்து தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.உறவுகள் நண்பர்களுடன் இணைந்து தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
28.02.2026
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos