;
Athirady Tamil News

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி

0

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி

பாறுக் ஷிஹான்

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தியும் வீதி ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் உங்களுக்காக நாங்கள் நடக்கின்றோம் என்ற தொனிப்பொருளுடன் அமைதியான விழிப்புணர்வு பேரணி இன்று (28) முற்பகல் அக்கரைப்பற்றிலிருந்து ஆரம்பித்து அட்டாளைச்சேனை வரை நடைபெற்றது.

இதன்போது இன்றைய இளையோர்கள் மாற்றத்துக்குத் தயாராக உள்ளார்கள்.அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்க விரும்புகின்றார்கள்.ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டியது யார்?

இளைய தலைமுறையை கடிந்து கொள்ளாமல் அவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களுக்கு முன்மாதிரியாக நாமே நடந்து காட்டுவோம்.

ஒழுக்கமான ஓட்டம், தலைக்கவசம் அணிதல்,சட்டத்தை மதித்தல்,பொது இடங்களில் பொறுப்புணர்வு -இவற்றை முதலில் பெரியவர்கள் கடைப்பிடித்தால்,
இளையோர்கள் தானாகவே பின்பற்றுவார்கள்.இளையோர்களை கெடுக்காதீர்கள்.அவர்களை கற்றுக்கொடுங்கள்.ஊக்கப்படுத்துங்கள்.முன்னுதாரணமாக இருங்கள்.

மாற்றம் பேசுவதால் வராது,மாற்றம் நாம் நடந்து காட்டுவதால் தான் வரும். என பல்வேறு கோஷங்கள் சுலோகங்களுடன் இப்பேரணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீதி ஒழுங்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான கே. நிஹால் அஹமட் ஒருங்கிணைப்பில் 3 ஆவது வாரமாக நடைபெற்ற இவ்வீதி விழிப்புணர்வு நடைபேரணியானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜீத் வெதமுல்லவின் பணிப்பில் அக்கரைப்பற்று போலிசார் , அம்பாறை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெவ்வை பங்கேற்புடன் சாரணர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள்,இளைஞர்கள்,ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.