;
Athirady Tamil News

ஸ்டார்ட் அப் சூழலை பயன்படுத்தி இளம் சுயதொழில் முனைவோர் முத்திரை பதித்துள்ளனர் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

0

இந்தியாவின் 73-வது குடியரசுதின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை, துடிப்பு ஆகியவை உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள் கொரோனா பெருந்தொற்றால் முடக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும் வலிமை வாய்ந்தது.

சுயராஜ்யம் என்ற தங்களது கனவை தொடர, ஒப்பிட முடியாத அளவிலான தைரியத்தினை வெளிப்படுத்தியதுடன், அதற்காக போராட மக்களையும் உத்வேகப்படுத்திய நம்முடைய மிக சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கொள்வோம்.

இந்த உலகம் தற்போது உள்ளதுபோல் மிக அதிக உதவி தேவைப்படும் நிலைக்கு, முன்பு ஒருபோதும் இருந்தது இல்லை.

இரு ஆண்டுகள் கடந்துவிட்டன. மனித இனம் கொரோனாவுடன் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலக பொருளாதாரமும் அதன் பாதிப்பில் சிக்கி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு வலிமையுடன் போராடி வருகிறது. நாம் அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவியும் வருகிறோம்.

முன்னெப்போதும் இல்லாத துன்பத்தினால் உலகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மனித குலத்திற்கு மிக பெரிய சவாலாக உள்ளது. புதிய வகை கொரோனாவால் புதிய நெருக்கடிகள் உண்டாகின்றன.

ஸ்டார்ட் அப் சூழலை மிகத் திறமையாக பயன்படுத்தி, நமது இளம் சுய தொழில் முனைவோர் முத்திரையை பதித்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த் கடற்படையில் சேர்ப்பு, பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.