;
Athirady Tamil News

ராணுவம் மூலம் போதைப்பொருள் கடத்தலை அழிக்க வேண்டும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற்ற ‘ஷீல்ட் ஆப் தி அமெரிக்காஸ்’ உச்சி மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அந்தந்த நாட்டு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்தது போல, ராணுவ பலத்தால் மட்டுமே இந்த பயங்கரவாத கும்பல்களை வீழ்த்த முடியும் என அவர் குறிப்பிட்டார். போதை கும்பல்களின் மையப்புள்ளியாக மெக்சிகோ இருப்பதாக விமர்சித்த டிரம்ப், கியூபாவிலும் விரைவில் மாற்றம் ஏற்படும் என எச்சரித்தார்.

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், தென் அமெரிக்காவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், அமெரிக்க பாதுகாப்பை நிலைநாட்டவும் இந்த மாநாட்டை டிரம்ப் முன்னெடுத்துள்ளார். அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட 12 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல் கடுமையாகச் சாடியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.