;
Athirady Tamil News

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

0

கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் தெய்வங்கள் இளைப்பாறும் மண்டபத்தில் காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக மாவை ஆதீனகர்த்தா
மகாராஜாஸ்ரீ து.ஷ. இரத்தினசபாபதிக் குருக்கள், நகுலேஸ்வர ஆதீனகர்த்தா சிவஸ்ரீ ந.ரங்கநாதக்குருக்கள், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவகெங்கா சுதீஸ்னர், கௌரவ விருந்தினராக யாழ். மாவட்ட உதவி செயலாளர் தர்ஷினி உருத்திரகோடீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.