தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது-31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
பதுளையில் வசித்து வந்தவர்கள் இளவாலையில் சிறுது காலம் வசித்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலை ஒப்படைத்து பிரேத பரிசோதனை அறிக்கையை ஒப்படைக்குமாறு இளவாலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.