;
Athirady Tamil News

மத்தியக் கிழக்கில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளமுடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0

ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையில் மூண்ட போர் சூழ்நிலை தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

இலங்கை செஞ்சிலுவை சங்கம்
இந்நிலையில் இலங்கையில் இருப்பவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தமது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு உதவ முன்வந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கம், +94 70 378 8614 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு அறிவித்துள்ளது.

அத்தோடு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவசியமான வசதிகள் செய்துதரப்படும் என்றும் அச்சங்கம் விளக்கமளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.