;
Athirady Tamil News

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’ உள்ளிட்ட பாடங்கள் நீக்கம்..!!

0

சிபிஎஸ்இ நிர்வாகம் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து அணிசேரா இயக்கம், பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.

அதேபோல 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பில் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு ஆகிய பிரிவில் இருந்து உருது கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் 2 கவிதைகளும் இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் சிபிஎஸ்இ தனது பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையிலும், பகுத்தறிவின் அடிப்படையிலும் இந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டம் 2022-2023 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.