;
Athirady Tamil News

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!!

0

இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக மூடி கொள்ளையன் உட்புகுந்து , வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டார் கொடுத்த முக மூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் குறித்த தகவலின் அடிப்படையில் 20 , 21 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.