வவுனியாவில் எந்தவித குழப்பமுமின்றி 1081 சமையல் எரிவாயு வழங்கி வைப்பு!! (படங்கள்)
வவுனியா ஊடக அமையம் மற்றும் உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு கழகம் என்பன இணைந்து 1081 லிற்றோ சமையல் எரிவாயுக்களை எந்தவித குழப்பமுமின்றி அமைதியான முறையில் மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தன.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தம் விளையாட்டுக் கழக மைதானத்தில் வைத்து அவை இன்று வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி எந்தவித மேலதிக கட்டணங்களுமின்றி 12.5 கிலோ சமையல் எரிவாயு ஒன்று 5,169 ரூபாய் படி 1011 உம், 5 கிலோ சமையல் எரிவாயு ஒன்று 2,127 படி 50 உம், 2.3 கிலோ சமையல் எரிவாயு ஒன்று 1,044 படி 20 உம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியாவின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் அதனை பெற்றுச் சென்றதுடன், மக்கள் நீண்ட நேர காத்திருப்பு, நீண்ட வரிசை, நேரவிரயம், அலைச்சல், மேலதிக கட்டணம் என எதுவுமின்றி அதனை இலகுவாக பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






